சென்னை: உலகளவில் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் விகிதம் கடந்த 1990 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே பெரியவர்களிடையே உடல் பருமன் விகிதம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என ‘தி லான்செட்’ வெளியிட்டுள்ள ஆய்வுத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் பருமனால் உலக அளவில் சுமார் நூறு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல் பருமன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 1,500 ஆய்வாளர்கள் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். 5 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களின் உயரம் மற்றும் உடல் எடை கணக்கிடப்பட்டுள்ளது. பிஎம்ஐ கணக்கீடு மூலம் 1990 முதல் 2022 வரையில் உடல் பருமன் விகிதத்தில் நிகழ்ந்துள்ள மாற்றம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஆய்வு பணிக்கு மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை ஒரு பகுதியாக உதவியுள்ளது.
இந்தியாவில் பெண்களின் உடல் பருமன் விகிதம் 1990-ல் 1.2% என்ற விகிதத்தில் இருந்து 2022-ல் 9.8% என அதிகரித்துள்ளது. அதுவே ஆண்களிடையே 1990-ல் 0.5% என்ற விகிதத்தில் இருந்து 2022-ல் 5.4% என மாற்றம் கண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
41 mins ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
27 days ago