ராமர் கோயில் திறப்பு விழாவின் வீடியோவை காண்பித்து ஆந்திராவில் அறுவை சிகிச்சை

By செய்திப்பிரிவு

குண்டூர்: ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் டாக்டர் ஸ்ரீநிவாச ரெட்டி இவர் அவ்வப்போது, மயக்க மருந்து கொடுக்காமலே நோயாளிகளுக்கு அவர்களுக்கு விருப்பமானதை காண்பித்தவாறே அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிப்பது வழக்கம்.

அதுபோல், சமீபத்தில், மணிகண் டன் என்கிற நோயாளி தீவிர வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 11-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சமீபத்தில் அயோத்தியில் நடைபெற்ற ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேக வீடியோ பதிவை ஆபரேஷன் தியேட்டரில் போட்டு காண்பித்தவாறே நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து டாக்டர் ஸ்ரீநிவாச ரெட்டி கூறுகையில், “மணிகண்டனுக்கு அதிகமான தெய்வபக்தி இருக்கிறது. ஆதலால், அவருக்கு பால ராமர் கோயில் திறப்பு விழாவின் வீடியோ போட்டு காண்பித்தவாறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மணிகண்டனும் அதில் மிகவும் லயித்து பார்த்தவாறே அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். அப்போது அவர் ஜெய் ஸ்ரீராம் என பலமுறை கூறினார்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

14 hours ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

மேலும்