நுகர்வு கலாச்சாரத்தில் அழிவை சந்திக்கிறோம்: எழுத்தாளர் ஜோ டி குரூஸ் கருத்து

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: நுகர்வு கலாச்சாரத்தில் அழிவை சந்திக்கிறோம் என்று சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் தெரிவித்தார்.

பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் பொருநை இலக்கிய திருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது: இந்த இலக்கிய அரங்கு பங்கேற் பவர்களும் வினாக்கேட்கும் அரங்காக மாறியுள்ளது. இந்த முயற்சி புதிதாக உள்ளது. மாணவர்களின் கேள்விகள் என்னை வியக்க வைக்கிறது. படைப்பாளர் - மாணவர் உரையாடல் இங்கே சாத்தியமாகி உள்ளது. நாஞ்சில் நாடன் நதிகளைப் பற்றி அழகாக சொன்னார்.

அவர் நதியைப் பற்றிச் சொன்னால், நான் கடல் பற்றி பேசுகிறேன். கடலால் சூழப்பட்டது இந்தியா. கடல் நமக்கு தேவைப்படுகிறது. எல்நினோ தாக்குதல் நம்மை வெள்ளத்தில் கொண்டுவிட்டது. இப்போது நுகர்வு கலாச்சாரத்தில் அழிவைச் சந்திக்கிறோம். நான் என் வாழ்தலை உணர்கிறேனா? சுவாசிப்பது மட்டுமா வாழ்க்கை?. அக்கறையான முன்னோர்களால் நாம் வாழ்கிறோம். காலத் தின் தூர ஓட்டத்தை அவர்கள் உணர்ந்திருந்தனர். அக்கறை யோடு எழுத்தை அவர்கள் வடிவமைத்தார்கள். அந்த அக்கறை நம்மிடம் உள்ளதா?

சிவாஜி கணேசன் நடிப்பில் வாழ்ந்தார். இளையராஜா இசை யால் வாழ்கிறார். அம்பேத்கர், பெரியார், சேகுவரா போன்றோர் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்தார்கள். இங்கே வந்து போகிறவர் களாலா உலகம் வாழ்கிறது. இல்லை, தங்கள் பங்களிப்பை செய்தவர்களால் உலகம் இன்றும் வாழ்கிறது. கோடிப்பேர் வாழ்ந் தாலும் பங்களிப்பு செய்தவர்களை மட்டுமே நாம் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறோம். யாரோ செய்த பங்களிப்பில் வாழும் நாம் இந்த உலகில் என்ன பங்களிப்பைச் செய்ய உள்ளோம். மாணவர்கள் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் கலாப்பிரியா, முனைவர் த. ஜான்சி பால் ராஜ், எழுத்தாளர் தாமரை செந்தூர் பாண்டி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE