பெங்களூரு: கர்நாடக சித்ரகலா பரிஷத்தின் சார்பாக பெங்களூருவில் ஜனவரி 7-ம் தேதி ஓவியச் சந்தை நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 2,271 ஓவியர்கள் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சித்ரகலா பரிஷத் தலைவர் பி.எல்.சங்கர் கூறியது: “மக்களிடையே ஓவியக் கலையை ஊக்குவிக்கும் நோக்கில் சித்ரகலா பரிஷத் சார்பாக கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஓவியச் சந்தை நடத்தப்படுகிறது. கர்நாடகா மட்டுமில்லாமல் நாடு முழுவதும் வாழும் ஓவிய கலை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஓவிய சந்தை இந்த ஆண்டு வரும் ஜனவரி 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் நடைபெறுகிறது.
குமார குருபா சாலையில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த ஓவியச் சந்தையை கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார். இந்த ஓவியச் சந்தையில் கர்நாடகா மட்டுமில்லாமல் தமிழகம், ஆந்திரா, கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2,271 ஓவியர்கள் கலந்துகொள்கிறார்கள். 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
குமாரகுருபா சாலையின் இரு புறங்களிலும் வரிசையாக பொதுமக்களின் பார்வைக்காக ஓவியங்கள் வைக்கப்பட்டும். இதில் பதிவு செய்யாத ஓவியர்களும் கலந்துகொண்டு, தங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்” என்று பி.எல்.சங்கர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
20 days ago