ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய ஓட்டுநருக்கு லாட்டரியில் ரூ.44 கோடி பரிசு

By செய்திப்பிரிவு

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் இந்தியருக்கு லாட்டரியில் ரூ.44 கோடி பரிசு கிடைத்துள்ளது.

இந்தியரான முனாவர் பைரோஸ் வேலை நிமித்தமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். அங்கு வாகன ஓட்டுநராக உள்ளார். வேலை மூலம் கிடைக்கும் சம்பளம் போதாத நிலையில், கூடுதலாக பணம் ஈட்டும் முயற்சிகளைத் தேடத் தொடங்கியவருக்கு ‘பிக் டிக்கெட்’ என்ற லாட்டரித் திட்டம் அறிமுகமானது. நண்பர்களுடன் இணைந்து லாட்டரி சீட்டுகளை வாங்க ஆரம்பித்தார். கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் லாட்டரி சீட்டு வாங்கி வருகிறார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.44 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. “எனக்கு பரிசு கிடைத்துள்ளது என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்துள்ளேன்” என்று பைரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

30 நண்பர்கள்: நண்பர்களின் பங்களிப்புடனே அவர் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இதனால், கிடைத்துள்ள ரூ.44கோடி பரிசுப் பணத்தை 30 பேருடன்பகிர உள்ளார். பைரோஸ் தவிர்த்து இந்தியா, பாலஸ்தீனம், லெபனான், சவுதி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேருக்கு ரூ.20 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.

அதேபோல், அபுதாபியில் மற்றொரு லாட்டரி திட்டத்தில் சுதேஷ் குமார் குமரேஷன் என்பவருக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் லாட்டரியில் ரூ.2 கோடி பரிசு கிடைத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE