மனைவிக்கு கோயில் கட்டி வழிபட்டு வரும் கணவர் @ ராமநாதபுரம்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: நயினார்கோவில் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்த மனைவிக்கு கணவர் கோயில் கட்டி வழிபட்டு வருவதுடன், அங்கு வருவோருக்கு அன்னதானமும் வழங்கி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் அருகேயுள்ள பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (50). மருந்துக்கடை நடத்து கிறார். இவரது மனைவி கலைச்செல்வி (40). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த கலைச் செல்வி, கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

அவரது மறைவை தாங்க முடியாத இளையராஜா பாண்டியூர் சாலையின் அருகே சிவன் ஆலயத்தை கட்டினார். அதில் இஷ்ட தெய்வங்களை பிரதிஷ்டை செய்து தனது மனைவியின் சிலையையும் அமைத்து வழிபட்டு வருகிறார். அதோடு அங்கு வரும் பக்தர் கள், சாலையில் செல்வோருக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். இது குறித்து இளையராஜா கூறும் போது, பொதுமக்களுக்கு சேவை செய்த எனது மனைவி கடவுளிடம் சென்று விட்டார். அவரின் நினைவாக கோயில் கட்டி வழிபட்டு சாலைகளில் செல்வோருக்கு கார்த்திகை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறேன் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE