சாலை விபத்தில் சிக்கியவரை காத்த மொகமது ஷமி @ நைனிடால்

By செய்திப்பிரிவு

நைனிடால்: உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் அமைந்துள்ள மலைப்பாதையில் சாலை விபத்தில் சிக்கிய காரில் இருந்தவரை இந்திய கிரிக்கெட் அணியின் பவுலர் மொகமது ஷமி மற்றும் அவருடன் இருந்தவர்கள் காத்துள்ளனர்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக அவர் பகிர்ந்துள்ளார். ஷமியின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக ஜொலித்தவர் ஷமி. 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருந்தார். இதில் 3 போட்டிகளில் 5+ விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவினார்.

“அந்த நபர் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுள் அவருக்கு இரண்டாவது பிறப்பை கொடுத்துள்ளார். நைனிடால் அருகே அமைந்துள்ள மலைப்பாதையில் எனது காருக்கு முன்னே அவர் பயணித்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. நாங்கள் அவரை மிகவும் பாதுகாப்பாக மீட்டோம். அவரை காப்பாற்றியதில் மகிழ்ச்சி” என ஷமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

20 days ago

மேலும்