மும்பை: எக்ஸ் சமூக வலைதளத்தில் தனக்கென கணக்கு எதுவும் இல்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவரது தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “சமூக வலைதளங்கள் நாம் நமது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கான அற்புதமான தளம். இருந்தாலும் சிலர் உண்மைக்கு புறம்பாக அதனை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. அது மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் நான் எனது டீப்ஃபேக் படங்களை பார்த்துள்ளேன்.
» திருச்சி அருகே என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை
» ”அசோக் கெலாட் அரசு 5 ஆண்டுகளில் ராஜஸ்தானை சீரழித்துவிட்டது” - ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
தவறான நோக்கத்தில் எக்ஸ் தளத்தில் எனது பெயரில் போலியாக சில கணக்குகள் இயங்குவதை அறிந்தேன். எனக்கு எக்ஸ் தளத்தில் கணக்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு இந்த வகை கணக்கு மீது எக்ஸ் தளம் கவனித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். எதார்த்த மற்றும் அசல் தன்மையுடன் தொடர்பியலை ஊக்குவிப்போம்.” இவ்வாறு சாரா தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் கட்டண சந்தா முறையில் ப்ளூ டிக் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சாரா பெயரில் போலியான எக்ஸ் கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதற்கு ப்ளூ டிக்கும் பெற்று, அதில் பதிவு செய்யப்பட்ட பதிவுகள் சர்ச்சை ஆகி இருந்தன. இந்த சூழலில் சாரா தனது தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளதோடு, இதன் மீது நடவடிக்கை எடுக்க எக்ஸ் தளத்துக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
21 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago