சிவகாசி: சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட், பொம்மை வடிவிலும், முதியவர்களுக்கு ஓலைவெடி என அனைவரையும் கவரும் வகையில் புதிய வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள வண்ண பட்டாசுகளால் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கி உள்ளது.
வெளிமாநில ஆர்டர் குறைவால் இந்த ஆண்டும் பட்டாசு விலையில் பெரிய அளவில மாற்றம் இல்லை. தீபாவளி என்றாலே பட்டாசு தான். நாட்டில் தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளில் 95 சதவீதத்துக்கு மேல் சிவகாசியில் உற்பத்தி செய்யப் படுகிறது. தீபாவளியையொட்டி ஆண்டு தோறும் புதிய வடிவம் மற்றும் வண்ணங்களில் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
சிவகாசி பகுதிகளில் மத்திய மற்றும் மாநில அரசு அனுமதி பெற்று சிறிய மற்றும் பெரிய அளவில் 1,100-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் ஜனவரி முதல் ஜூலை வரை வடமாநில பண்டிகைகள், கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளை மையப்படுத்தி ‘ஆப் சீசன்’ உற்பத்தி நடை பெறும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தீபாவளி சீசன் உற்பத்தி நடைபெறும்.
தீபாவளிக்கு அனைவரையும் கவரும் வகையில் புதிய ரக பட்டாசுகள் அறிமுகப் படுத்தப்படும். இந்த ஆண்டு தீபாவளிக்கு கிரிக்கெட் பேட், சிங்கம், டைனோசர், மீன், தேனீ, கிண்டர் ஜாய், லாலி பப், போர் வாள், கார்டூன் பொம்மைகள் என பல்வேறு வடிவங்களில் பட்டாசு உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. அதேபோல மயில் தோகை, மல்லிகைப் பூ, வானவில் என பல்வேறு வண்ணங்களில் ஒளிரும் பட்டாசு கள் விற்பனைக்கு வந்துள்ளன.
» வங்க கடலில் கற்கால மனிதனின் ஈமச்சின்னங்கள் - பூம்புகாரில் இருந்து 35 கி.மீ கிழக்கே கண்டுபிடிப்பு
» இந்திய நன்கொடையாளர்கள் பட்டியல்: தினமும் ரூ.5.6 கோடி வழங்கி ஷிவ் நாடார் முதலிடம்
‘ஓல்டு இஸ் கோல்டு’ என்ற பெயரில் பாரம்பரிய ஓலை வடிவிலான பட்டாசு, வாசம் வீசும் புகை மற்றும் சிறுவர்களுக்கு ரிவால்வர், ஏ.கே.47, 5 ஜி என துப்பாக்கிகளிலும் புதிய மாடல் கள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் வழக்கமான புஸ் வானம், தரைச் சக்கரம், கம்பி மத்தாப்பு ஆகியவையும் புதிய வண்ணம் மற்றும் வடிவங்களில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவும் பசுமை பட்டாசும்: பட்டாசு வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுவதால் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி, 2018-ம் ஆண்டு தாக்கலான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பில் பேரியம் நைட்ரேட் பயன்பாடு மற்றும் சரவெடி உற்பத்திக்கு தடை விதித்து, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை தயாரிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்), தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (நீரி) மற்றும் பெட்ரோலியம் மற்றும் வெடிப் பொருள்கள் பாதுகாப்பு அமைப்பு (பெசோ) ஆகியவை இணைந்து பசுமை பட்டாசு உற்பத்திக்கான பார்முலா தயாரிக்கப்பட்டது.
அதன்படி தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, தற்போது குறைந்த புகை வெளியீடு மற்றும் 120 டெசிபல் அளவுக்கு கீழ் ஒலி வரக்கூடிய பசுமை பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கட்டுப்பாடு மற்றும் விபத்தால் குறைந்த வடமாநில விற்பனை: கர்நாடக மாநிலம் அத்திப் பள்ளி பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தை அடுத்து அம்மாநிலம் முழுவதும் பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களில் பட்டாசு இருப்பு வைக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் விற்பனையில் சரிவு ஏற்பட்டது.
நாடு முழுவதும் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி, டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வடமாநில ஆர்டர் பாதிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு விலையில் மாற்றமில்லை: கடந்த ஆண்டு மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக பட்டாசு விலை 40 சதவீதம் வரை உயர்ந்தது. எனினும் விற்பனை அதிகரிப்பால் தமிழகத்தில் ரூ.400 கோடியும், இந்திய அளவில் ரூ.6 ஆயிரம் கோடிக்கும் தீபவாளிக்கு பட்டாசு வர்த்தகம் நடைபெற்றது.
இந்த ஆண்டு ‘ஆப் சீசன்’ காலத்தில் வடமாநிலத்தில் விற்பனை சரிவடைந்ததால் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் பட்டாசு அதிகளவில் தேங்கியது. மேலும் தீபாவளி சீசன் விற்பனைக்கு வடமாநில பட்டாசு ஆர்டர்கள் குறைந்ததால் உற்பத்தி யாளர்களிடம் பட்டாசு அதிக அளவில் தேங்கியது. இதனால் இந்த ஆண்டு பட்டாசு விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
சிவகாசியில் குவியும் வெளியூர் மக்கள்: சிவகாசி பட்டாசுகள் நாடு முழுவதும் கிடைத்தாலும், சிவகாசியில் விலை குறைவு மற்றும் புதிய ரக பட்டாசுகளை நேரடியாக சோதித்து பார்த்து வாங்கலாம் என்பதால் வெளியூர் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில வாடிக்கையாளர்களும் பட்டாசு வாங்குவதற்காக குடும்பத்துடன் சிவகாசிக்கு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
16 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago