பழநி: மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை பராமரிக்க முடியாத உறவினர்கள், பழநி ஆன்மிக தலம் என்பதால் இங்கு கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். அவ்வாறு ஆதரவின்றி விடப்படும் அவர்கள் பழநி நகர் முழுவதும் சுற்றித் திரிகின்றனர். அவர்களால் சில நேரங்களில் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
பழநி சுற்றுவட்டாரப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிபவர்களுக்கு பாதுகாப்பான தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து பழநி தேவஸ்தானம் சார்பில் மனநல காப்பகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, புதிய தாராபுரம் சாலையில் பயன்பாடின்றி உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான ராமகிருஷ்ணா விடுதியை ரூ.43 லட்சம் செலவில் சீரமைத்து மனநல காப்பகமாக மாற்றப்பட்டுள்ளது. அதனை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரல் சேவையில் தொடர்பு கொண்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.பகத்சிங் கூறியதாவது: பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பழநியில் விட்டுச் செல்கின்றனர். குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சமூக விரோதிகளால் பாதிப்பு ஏற்படுகிறது.
» இளம் பெண்களைக் கவரும் சின்னாளபட்டி சுங்குடி சேலைகள் - தீபாவளிக்காக குவியும் ஆர்டர்கள்
» ''பிரதமர் வேட்பாளர் இல்லாதது இண்டியா கூட்டணிக்கு பிரச்சினை இல்லை'': சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா
இதைத் தடுக்க, கடந்த 10 ஆண்டுகளாக மனநலக் காப்பகம் வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். தற்போது தேவஸ்தானம் சார்பில் மனநல காப்பகம் அமைக்கும் பணிகள் முடிவடைந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த காப்பகம் பயன்பாட்டுக்கு வந்தால் மனநலம் பாதித்த பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
மேலும் மருத்துவர்களின் சிகிச்சை மூலம் அவர்கள் குணமடைந்து நினைவு திரும்பவும் வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக மனநல காப்பகத்தை திறக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பழநி தேவஸ்தான அதிகாரிகளிடம் கேட்டபோது, மனநல காப்பகம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டதும் காப்பகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
26 days ago
வாழ்வியல்
26 days ago
வாழ்வியல்
27 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago