ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் 6 கிராமங்களை புகையிலை இல்லா கிராமங்களாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
பீடி, சிகரெட், பொடி மற்றும் ஹான்ஸ் உட்பட புகையிலை பொருட்களினால் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, பீடி, சிகரெட்டுகளை பயன்படுத்துபவர்கள் மட்டுமின்றி அவர்கள் விடும் புகையை சுவாசிக்கும் மற்றவர்களும் வாய், நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
புகையிலை பயன்பாடுகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், புகையிலை பயன்பாடு குறைந்தபாடில்லை. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட நிர்வா கத்தின் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் புகையிலை பொருட்களை ஒழிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடைகளில் திடீர் ஆய்வு, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தல், கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். மேலும், புகையிலை பயன்பாடு களை குறைப்பதற்கான நடவடிக்கையாக தேசிய புகை யிலை தடுப்பு திட்டத்தில் மாவட் டத்தில் உள்ள 6 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
» தமிழ் ஆசிரியராக பாரதியார் பணியாற்றியபோது... | மகாகவியின் நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
» டயாலிசிஸ் நோயாளிகள் உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்: சிறுநீரக மருத்துவர் அறிவுறுத்தல்
இந்த கிராமங்களில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்களை விற் பனை செய்யக்கூடாது என்றும், கிராம மக்கள் யாரும் புகையிலை பொருட்களை பயன்படுத் தக்கூடாது என அறிவுறுத்து வதோடு, அதன் மூலமாக ஏற் படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கின்றனர். மேலும், ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக இந்த கிராமங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் படிப்படியாக மற்ற கிராமங்களிலும் அமல்படுத்தப்படும். புகையிலை பயன்பாட்டையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைப் பதே இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத்துறை அதி காரிகள் கூறும்போது, "திமிரி வட்டத்தில் விளாரி கிராமம், சோளிங்கர் வட்டத்தில் வேலம், வி.புதூர், ஆயல், சூரை மோட்டூர், நந்திமங்கலம் ஆகிய 6 கிராமங்கள் தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இந்த கிராமங்களில் உள்ள கடை களில் எந்தவித புகையிலை பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது.
யாரும் புகை யிலை பொருட்களை பயன்படுத் தக்கூடாது என பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஊராட்சி மூலம் இது குறித்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி யூர்களில் இருந்து இந்த கிரா மத்துக்கு வருபவர்களும் புகை யிலை பொருட்களை பயன் படுத்தக்கூடாது என கிராம மக்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்டு வரு கின்றனர்.
மேலும், கிராமத்தின் நுழை வாயிலில் ‘புகையில்லா புது வாழ்வு கிராமம்' என்ற பெயர் பலகை வைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் புகையிலை பயன் பாட்டை குறைப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முதற் கட்டமாக 6 கிராமங்களில் செயல்படுத்தப் படுகிறது. தொடர்ந்து, மாவட் டத்தில் உள்ள மற்ற கிராமங்களிலும் செயல்படுத்தப்படும்" என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
13 hours ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago