கோவை அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு நடப்பாண்டில் 484 பேர் 1,280 லிட்டர் தாய்ப்பால் தானம்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு நடப்பாண்டில் 484 பேர் 1,280 லிட்டர் தாய்ப்பால் தானம் அளித்துள்ளதாக மருத்துவ மனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவ மனையில் கடந்த 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. நேற்று நிறைவு விழா நடைபெற்றது.

இது குறித்து மருத்துவமனை யின் டீன் நிர்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எம்.பி.பி.எஸ் மாணவர்கள், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட கோவையில் உள்ள 5 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தாய்ப்பால் குறித்த விநாடி வினா போட்டி நடைபெற்றது.

போத்தனூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரிக்கு சென்று தாய்ப்பால் குறித்து குழந்தைகள் நல துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோவை அரசு மருத்துவமனை முதல் ரேஸ்கோர்ஸ் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது., கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நாடகம் நடித்து காண்பித்தனர். கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு புரியும் வகையில் வில்லுப்பாட்டு நிகழ்வும் நடைபெற்றது.

நர்சிங் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ரங்கோலி வரைதல், ஸ்லோகன் எழுதுதல், போஸ்டர் தயாரிப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கோவை அரசு மருத்துவமனை யில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 484 பேர் மொத்தம் 1,280 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து தாய்ப்பால் அளித்த தாய்மார்கள் கவுரவிக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வுகளில் குழந்தைகள் நலத்துறை தலைவர் லட்சுமணசாமி, பச்சிளங் குழந்தைகள் பிரிவு நோடல் அதிகாரி சசி குமார், பச்சிளங் குழந்தைகள் சிறப்பு நிபுணர்கள் பி.செந்தில் குமார், வி.கே.சத்யன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்