திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த மாவடப்பு, குழிப்பட்டி, கோடந்தூர் உள்ளிட்டமலைவாழ் கிராமங்களில் பழமை வாய்ந்தகல் திட்டைகள் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வரலாற்றுக்கு முந்தைய கால கட்டம்தொல்பழங்காலம் எனவும் மண்ணியல் காலம் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். தொல்பழங்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு பழைய கற்காலம், நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் என 4 பிரிவுகளாக வரலாற்று ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது: பழைய கற்காலம் என்பது காடுகளில் இயற்கைச் சூழலோடு மனிதர்கள் தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்டதையும், உணவு தேவைக்காக காட்டிலிருக்கும் விலங்குகளை அவர்கள் வேட்டையாடியதையும், உணவுக்கான முக்கிய தொழிலே வேட்டையாடுதலாக இருந்ததையும் காணமுடியும். இதற்காக அவர்கள் பயன்படுத்திய கைக்கோடாரிகள், சுரண்டை ஆகிய கருவிகள் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப அமைந்திருந்தன.
பழைய கற்கால மக்களின் அடுத்த வளர்ச்சியடைந்த நிலை இடைக் கற்காலம் அல்லது நுண்கற்காலம் என்று அழைக்கப்படுகிறது. இவர்களும் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடுவதை பிரதானமாக கொண்டிருந்தனர். அதற்காக அதிக அளவில் கல் ஆயுதங்களை பயன்படுத்தியிருப்பதும், இவர்கள் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் எனவும் வரலாற்றுஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
» ஆசிய சுற்றுப் பயணத்துக்கான பிஎஸ்ஜி அணியில் இடம்பெறாத எம்பாப்பே: அணி மாறுகிறாரா?
» முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை உயர்வு: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
இவர்கள் குகைகளிலும், குகை போன்ற பாறைகளின் அடியிலும் வாழ்ந்துள்ளனர். இவர்கள்தங்களுடைய உணவைத்தேடி காடுகளிலும்மலைகளிலும் அலைந்து திரிந்தனர். கல் ஆயுதங்களை தவிர மற்ற உலோகங்களின் பலன் தெரியாத இவர்களின் காலத்துக்கு பிறகு வாழ்ந்தவர்கள் புதிய கற்காலத்தை சேர்ந்தவர்களாக குறிப்பிடப்படுகிறது.
புதிய கற்கால மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கி வாழ்ந்தனர். கால்நடைகளான ஆடு, மாடுகளை வளர்த்தனர். வேட்டையாடுவதை தொழிலாகக் கொண்ட நிலையில் இருந்து முன்னேறி வேளாண்மை செய்யவும்,விளைபொருட்களை உட்கொள்ளவும் பழகியிருந்தனர். விலங்குகளை வேட்டையாடிக்கொல்வதற்கு கூர்மையான கருவிகளைகையில் பிடிப்பதற்கு வசதியாக உருவாக்கினர். கைக்கோடாரி, கல் சுத்தி போன்ற கருவிகள் அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வகையான மக்கள் சுமார் 4000ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கக்கூடும்.
4-வது பிரிவைச் சேர்ந்த மக்கள் பெருங் கற்காலத்தைச் சேர்ந்தவர்களாக குறிப்பிடப் படுகிறது. இவர்களின் காலம் கிமு 3200 -ல்தொடங்கி கிமு 1500 வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இறந்தோரைப் புதைத்த இடத்தில் அல்லது அவர்கள் எலும்புகளை புதைத்த இடத்தில் பெரிய கற்களைக் கொண்டு சூழப்பட்ட கல் திட்டைகளை உருவாக்கினர். இவை பெருங்கற்கால சின்னங்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பெரும்பாலான பகுதிகளில் மலையின் உச்சியில் உள்ள சமமான பகுதிகளில் கல் திட்டைகள் காணப்படுகின்றன. திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த மாவடப்பு, குழிப்பட்டி, கோடந்தூர் உள்ளிட்ட மலைவாழ்கிராமங்களில் இவ்வகையான கல் திட்டைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இவ்வகையான கல் திட்டைகள் சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். தமிழகத்தில் இவை ஈமச்சின்னங்கள்என்று அழைக்கப்படுகின்றன. கல்வெட்டுகள், நடுகற்கள், சுவடிகள் போன்ற சாசனங்கள் மூலம் இதன் வரலாறு அரியப்படுவதாக கூறப்படுகிறது.
பலகை வடிவிலான பாறை கற்களால் இவை உருவாக்கப்பட்டு சிறிய அளவிலான வீடு போல அமைந்துள்ளன. மலைகளின் உச்சியில் உள்ள சமதளப்பரப்பில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. கல் திட்டைகள் யாருடையது என்ற விவரங்கள் இல்லை.இடங்களை வைத்து எந்த இனக்குழுவினர் வாழ்ந்தார்கள் என்பதை அறியமுடிகிறது.
பக்கத்திற்கு ஒரு கற்பலகையை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பலகை கற்களை வைத்து மேற்புறம் அகலமான பலகை கல்லைவைத்து மூடப்பட்டுள்ளன. கல் திட்டையின் கிழக்குப் பக்கமுள்ள பலகைக் கல்லில் வட்ட வடிவில் இடுதுளை ஒன்று காணப்படுகிறது. ‘யு’ வடிவிலும் துளைகள் இடப்பட்டுள்ளன.
இதே போல உடுமலை அடுத்தகொங்கல் நகரம், இரண்டு கல்திட்டைகளும் கோட்ட மங்கலம் கிராமத்தில் இரண்டு கல்திட்டைகளும் காணப்படுகின்றன. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் அரிதாக தென்படும் பெருங்கற்கால சின்னமான கல் திட்டைகளை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை பண்டைய மக்களின் சான்றுகளாக உள்ளன. எனவே, அடுத்த தலைமுறையினருக்கு பெருங்கற்கால மனிதர்கள் பற்றிய ஆய்வுக்கு இவை பெரிதும் உதவும். இவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
6 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
21 days ago
வாழ்வியல்
21 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago