120 கிலோ எடை... விலை ரூ.6 லட்சம் - கோவையில் கவனம் ஈர்த்த தென்னாப்பிரிக்கா ஆடு

By செய்திப்பிரிவு

கோவை: கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 21-வது அக்ரி இன்டெக்ஸ் வேளாண் கண்காட்சி நேற்றும் இன்றும் நடந்தது. இக்கண்காட்சியில் வேளாண்மை சார்ந்த பல்வேறு இயந்திரங்கள், விதைகள், கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

பார்வையாளர்களை கவர்ந்த போயர் இன ஆடு: இக்கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ள ரூ.6 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ எடை கொண்ட தென்னாப்பிரிக்க நாட்டு இனத்தை சேர்ந்த போயர் ஆடு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதுதொடர்பாக அரங்கத்தினர் கூறும்போது, ‘‘நம் நாட்டு இன (ப்ரீடு) ஆடுகள் ஆண்டுக்கு 8 முதல் 12 கிலோ வரை எடை இருக்கும். இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த போயர் இன ஆடாகும். இது ஓராண்டில் 70 கிலோ எடை வரும்.

தன் வாழ்நாளில் மொத்தம் 140 கிலோ வரை எடை வரும். இனப்பெருக்க உற்பத்திக்காக இவ்வகை ஆடு பயன்படுத்தப்படும். மந்தையில் 25 பெண் ஆடுகளின் இனப்பெருக்கத்துக்கு இந்த ஓர் ஆடு போதும். பிறந்த குட்டிகளின் உடல் எடையும் அதிகமாக இருக்கும். இதனால் ஆடு வளர்ப்பு மற்றும் விற்பனையாளர்களுக்கு லாபம் அதிகரிக்கும்’’என்றனர்.

மொபைல் பம்ப் கன்ட்ரோலர்: நவீன தொழில்நுட்பங்களின் பங்களிப்பு அனைத்து துறைகளிலும் நுழைந்து வருகிறது. அதன்படி, மோட்டார் பயன்பாட்டுக்கும் நவீன தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வயல்களில் நீர் பாய்ச்சும் விவசாயிகள், வீடுகளின் தொட்டிகளில் நீர் ஏற்றுபவர்கள் என யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

இத்திட்டத்தின்படி, மொபைல் பம்ப் கன்ட்ரோலர் யூனிட்டில் சிம்கார்டு பொருத்தப்படும். அதன் மூலம் செல்போன் அழைப்பு, குறுந்தகவல் மூலமாக, இந்த யூனிட்டை தொடர்பு கொண்டு மோட்டாரை அணைத்துவிடலாம். அனைத்து வகையான பம்புகளுக்கும் பொருத்தலாம். குறைந்த, அதிக வோல்டேஜ் நேரங்களிலும், ட்ரை ரன், ஓவர்லோடு நேரங்களிலும் மோட்டாரை நிறுத்தி பாதுகாக்கிறது.

காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த செல்போன் அழைப்பு மூலம்
மோட்டாரை நிறுத்தும் கருவி. படங்கள்: ஜெ.மனோகரன்

டிரோன் கருவி பயன்பாடு: சரியான பயிர் உற்பத்திக்கு முறையான நீர்ப்பாசனம், சரியான விகிதத்தில் இடுபொருட்கள் அளித்தல் அவசியமாகும். விவசாயிகளின் பயன்பாட்டுக்காக ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு, தண்ணீர் தெளிப்பு கருவிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

உரமாக இருந்தால் 10 கிலோவும், தண்ணீராக இருந்தால் 10 லிட்டரும் இந்த ட்ரோன் மூலம் 8 நிமிடத்தில் ஓர் ஏக்கர் பயிரில் தெளிக்க முடியும். இவற்றின் விலை ரூ.4 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை இருக்கும்.

வேளாண் கழிவு துகளாக்கும் இயந்திரம்: வேளாண் கழிவுகளான காய்ந்த, பச்சையாக உள்ள தென்னை மர மட்டைகள், வாழை உள்ளிட்ட பல்வேறு வகை மரங்களின் கழிவுகள், மிக இலகுவான மரக்கிளைகள், குச்சிகள் போன்றவற்றை அப்புறப்படுத்துவதில் விவசாயிகளுக்கு பல்வேறு இடர்பாடுகள் உள்ளன.

அவற்றை நீக்கி, வேளாண் கழிவுகளை துகளாக்கும் இயந்திரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. டிராக்டர் மூலமாக இந்த இயந்திரத்தை இயக்கலாம். வேளாண் கழிவுகளை ஒற்றை வேக சுழற்சியின் மூலமாக துகளாக்கிக் கொடுக்கும். அவ்வாறு துகளான வேளாண் கழிவுகள் குறிப்பிட்ட நாட்களில் மக்கி விடும். தோராயமாக ஒரு மணி நேரத்துக்கு 1,700 முதல் 2,200 கிலோ வரை கழிவுகளை துகளாக்கலாம் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

களையெடுக்கும் ரோபோ கருவி: இக்கண்காட்சியில் தானியங்கி முறையில் களை எடுக்கக்கூடிய ரோபோ இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. கேமரா மற்றும் ஜிபிஎஸ் வசதி மூலம் செல்போனை பயன்படுத்தி இயங்கக்கூடிய இந்த ரோபோவை உழுதல், களையெடுத்தல், ஸ்பிரேயிங் போன்ற வேளாண் பணிகளில் பயன்படுத்தலாம். ஏறத்தாழ 100 கிலோ எடை அளவுக்கு அறுவடை செய்த பொருட்களையும் இதில் எடுத்துச் செல்லலாம். தானியங்கி பழம் பறிக்கும் ரோபோ இயந்திரமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்