விருதுநகர்: ஆடை, அலங்காரத்தில் பெண்களுக்கு நிகர் பெண்களே. அதிலும் மணப்பெண் ஆடை அலங்காரம் என்றால் கேட்கவே வேண்டாம். அதில், அவ்வளவு கவனமும், அக்கறையும், செலவும், கூடுதலாகவே இருக்கும். அண்மையில் பிரபலமாகி வரும் மணப்பெண் ஜாக்கெட் ஆரி ஒர்க் வேலைப்பாட்டில் விருதுநகர் தனி முத்திரை பதித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் வரும் அளவுக்கு ஆரி ஒர்க் பெயர் பெற்றுள்ளது. விருதுநகர் மேலத்தெருவில் 10-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் இரவு பகலாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, மேலத்தெருவில் தையலகம் நடத்திவரும் செல்வி (42) கூறியதாவது: 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். 18 வயதில் தையல் பழகினேன். கடந்த 14 ஆண்டுகளாக பெண்களுக்கான தையலகத்தை நடத்தி வருகிறேன். ஆரி ஒர்க் எங்களது தனிச் சிறப்பு. பலர் ஆரி ஒர்க் பணியை மதுரை, கோவை போன்ற வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி பெறுகிறார்கள்.
ஆனால், நாங்கள் விருதுநகரிலேயே இப்பணியை மேற்கொள்கிறோம். ஆரி, குந்தன், ஸ்டோன் டிசைன், எம்ப்ராய்டிங் என அனைத்து வகையான டிசைன்களிலும் தைத்து தருகிறோம். மணப்பெண் ஆர்டர்களே அதிகம் வரும். அதுமட்டுமின்றி, மணப்பெண் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்குமான ஆர்டர்கள், கல்லூரி மாணவிகள், வரவேற்பு நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஆர்டர்களும் வருகின்றன.
குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் அதிகபட்சம் ரூ.22 ஆயிரம் வரை ஆரி ஒர்க் டிசைன்கள் உள்ளன. ஜாக்கெட் தைப்பதற்கு 15 பெண்கள் பணியில் உள்ளனர். ஆரி ஒர்க் செய்வதற்கு மட்டும் பெங்களூருவைச் சேர்ந்த 13 கலைஞர்கள் உள்ளனர். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பணி நடைபெறும். சீசன் நேரத்தில் ஷிப்ட் முறையில் இரவு பகலாக பணி நடக்கும்.
» கும்பகோணம் அருகே கீழப் பழையாறையில் புத்தர் சிலையின் தலை பகுதி கண்டெடுப்பு
» வண்ண சித்திரங்களால் மிளிரும் ஓசூர் மேம்பாலம் - ஈர்க்கும் கெலவரப்பள்ளி அணை ஓவியம்
உள்ளூர், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி மலேசியா, கனடாவில் இருந்தும் தற்போது ஆர்டர்கள் வருகின்றன. சமூக வலைதளத்தில் எங்களது டிசைன்களை பார்த்து ஈர்க்கப்பட்டு பலர் ஆர்டர்கள் தருகின்றனர். வெளிநாடுகளில் உள்ள தையலகங்கள் மூலமும் ஆர்டர் கள் வருகின்றன. குறிப்பாக, வெளி நாடுவாழ் தமிழ் பெண்கள் ஆரி ஒர்க் வேலைப்பாடுள்ள ஜாக்கெட்டுகளை விரும்பி அணிகிறார்கள். நான் சுயமாக தொழிலில் ஈடுபடுவதால் பலருக்கு வேலை வழங்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
28 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago