பிரான்ஸ் ஒயின் திருவிழாவில் மின்மினிகளாக மாறிய ட்ரோன்கள்: வானில் மாயாஜாலம்!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் அண்மையில் நிறைவுற்ற போர்டியாக்ஸ் ஒயின் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இரவு நேர வானில் அணிவகுத்து மாயாஜாலம் செய்துள்ளன. அந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவலாக கவனம் பெற்று வருகிறது.

இந்த நிகழ்வு சார்ந்த வீடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. வானில் ஒயின் பாட்டிலில் இருந்து கோப்பையில் ரெட் ஒயின் ஊற்றுவது போன்ற வீடியோவும் அடங்கும். அந்த அளவுக்கு மிகவும் நேர்த்தியாக ட்ரோன்கள் அணிவகுத்து வானில் இதனை நிகழ்த்தி இருந்தன. நிச்சயம் அந்த ட்ரோன்களை ரிமோட் கொண்டு இயக்கிய பைலட்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அழகியலுடன் அமைந்திருந்தது அந்தக் காட்சி.

‘கிராபிக் டிசைன் மற்றும் மார்க்கெட்டிங்கை ட்ரோன்கள் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளன’, ‘பாட்டிலில் இருந்து கோப்பையில் ஒயின் ஊற்றும் அந்தக் காட்சி அழகு’, ‘டிஜிட்டல் யுக சாதனங்கள் மூலம் பாரம்பரியத்தையும் தழுவ முடியும். இரவு நேர வானை ஒளிரச் செய்ய பட்டாசுகள் தேவை இல்லை. ட்ரோன்கள் போதும்’ என பயனர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளார்.

போர்டியாக்ஸ் ஒயின் திருவிழா கடந்த 22 முதல் 25-ம் தேதி வரையில் நடைபெற்றுள்ளது. இதற்கு வருகை தந்தவர்கள் பலவிதமான ஒயின்களை ரசித்து, ருசித்ததாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE