'நான் ரெடி' பாடல் | ரசிகர் எடிட் செய்த விராட் கோலி வெர்ஷன்!

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் ‘நான் ரெடி’ முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது இசை, சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்தப் பாடலின் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி வெர்ஷனை எடிட் செய்து வெளியிட்டுள்ளார் அவரது அன்பான ரசிகர் ஒருவர்.

விராட் கோலியின் கள செயல்பாடு குறித்து சொல்லவே தேவையில்லை. அது அனைவரும் அறிந்ததே. எதிரணி வீரர்களுக்கு சவால் கொடுப்பது, பேட்டிங்கில் மாஸ் காட்டுவது, அப்படியே ரசிகர்களை எண்டர்டெயின் செய்வது என செம ஆக்டிவாக இருப்பார். அவர் கேப்டனாக இயங்கிய போதும் தொடர்ந்தது. அது உள்நாடோ, வெளிநாடோ. ஐபிஎல் கிரிக்கெட்டோ, உலக கிரிக்கெட்டோ. அதில் எள்ளளவும் பஞ்சம் இருக்காது.

மேற்கூறிய அந்த தருணங்கள் அனைத்தையும் அழகாக வெட்டி எடுத்து, ஒரே வீடியோவாக கோர்த்து, கூடவே வைரலாகி உள்ள ‘நான் ரெடி’ பாடலை சேர்த்து மிகவும் நேர்த்தியாக அந்த ரசிகர் எடிட் செய்து, வெளியிட்டுள்ளார்.

சுமார் 55 நொடிகள் மட்டுமே ரன் டைம் கொண்ட இந்த வீடியோ ரசிகர்களை நிச்சயம் வெகுவாக கவரும். இதுவரை சுமார் 36,000 வியூஸ்களை இந்த வீடியோ கடந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

18 days ago

மேலும்