சிவகங்கை: வாசிப்பை ஊக்குவிப்பதற்காக, 200 கிராமப்புற மாணவர்களை நூலக உறுப்பினராக்கியதோடு, அவர்கள் விரும்பும் புத்தகங்களை வீடு தேடிச் சென்று வழங்கி வருகிறார் சிவகங்கை நாடகக் கலைஞர்.
சிவகங்கை அருகே வல்லனியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் ஏ.ஈஸ்வரன் (55). இவர், நாடகங்களை எழுதி இயக்குவதோடு, அதில் நடிக்கவும் செய்கிறார். கடந்த 1990 முதல் நேரு இளையோர் மையம் மூலம் தமிழகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு மற்றும் வானொலி நாடகங்களை நடத்தியுள்ளார்.
இதன் மூலம் தேசம், மத நல்லிணக்கம், கல்வி, சிறுசேமிப்பு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் வேட்கை, இளம் இயந்திரங்கள், போதிமரம், நிழல் தராத மரங்கள், தேசிய விழா, கை நழுவிய வாய்ப்புகள் என மொத்தம் 17 நூல்களை எழுதியுள்ளார்.
தற்போது, மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 200 கிராமப்புற மாணவர் களை தனது சொந்த செலவில் சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராக்கியுள்ளார். மேலும், நூலகத்துக்கு வரமுடியாத மாணவர்களுக்கு, அவர்களது வீடுகளுக்கே சென்று புத்தகங்களை வழங்குகிறார்.
சென்னை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களில் புத்தகங்கள் வாங்குவோருக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்குகிறார். இவரது இச்சேவையால் சிவகங்கை மாணவர்களிடையே புத்தகம் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஏ.ஈஸ்வரன் கூறியதாவது: எனது நாடகங்கள், புத்தகங்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில் கலைநன்மணி விருதும், கடந்த 2019-ம் ஆண்டில் தேசிய விழா என்ற நூலுக்காக சிறந்த நாடக நூலுக்கான விருதும் கிடைத்தது. மேலும், எனது புத்தகங்கள் அரசு நூலகங்களில் இடம்பெறச் செய்து, என்னை அரசு பெருமைப்படுத்தியது.
இணையதள வளர்ச்சியால் மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. அவர்களுக்கு வாசிப்பு மீதான ஈர்ப்பை ஏற்படுத்த நூலகங்களில் உறுப்பினர்களாக்கி, அவர்களது இல்லங்களிலேயே புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். அவர்கள் படித்து முடித்ததும் நூலகத்தில் கொண்டு சேர்ப்பேன். இதை ஒரு சேவையாக செய்து வருகிறேன், என்றார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
28 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago