12 கிலோ எடை கொண்ட 'பாகுபலி' சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு!

By செய்திப்பிரிவு

மீரட்: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இயங்கி வரும் இனிப்பகம் ஒன்றில் சுமார் 12 கிலோ எடை கொண்ட சமோசாவை 30 நிமிடங்களுக்கு சாப்பிட்டு முடித்தால் ரூ.71,000 பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா சைஸ் சமோசா ‘பாகுபலி சமோசா’ என அழைக்கப்படுகிறது. உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் பிரத்யேக மசாலா கொண்டு தேர்ந்த சமையல் கலைஞர் தயார் செய்யப்படும் இந்த சமோசா, சட்னியுடன் உணவுப் பிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த பலே யோசனையை அந்த இனிப்பகத்தின் உரிமையாளர் ஷுபம் கௌஷல் முன்னெடுத்துள்ளார். தனது தொழிலை பிரபலம் செய்யும் வகையிலும், புதிய வாடிக்கையாளர்களை கவரும் நோக்கிலும் இதை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதோடு தனது வாடிக்கையாளர்களுக்கு வேடிக்கை நிறைந்த சவாலாக இது இருக்கும் எனவும் அவர் சொல்கிறார்.

இதுவரை இந்த சமோசா சாப்பிடும் சவாலில் யாரும் வெற்றி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வாடிக்கையாளர் ஒருவர் சுமார் 9 கிலோ சமோசாவை 25 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்துள்ளாராம். நிச்சயம் இந்த சவாலில் யாரேனும் ஒரு வாடிக்கையாளர் வெற்றி பெறுவார் என தான் நம்புவதாக கௌஷல் தெரிவித்துள்ளார். அதுவரை இது தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பாகுபலி சமோசாவின் விலை ரூ.1,100.

இதற்கு வாடிக்கையாளர்கள் தரப்பில் கலவையான வரவேற்பு கிடைத்துள்ளது. சிலர், தங்களால் முடியும் என ஆவலுடன் இந்த சமோசா சவாலில் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். சிலரோ, இது ரொம்ப அதிகம். நிச்சயம் இதனை சாப்பிட முடியாது என சொல்கின்றனர். நமக்கோ ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் வரும் பரோட்டா காமெடி காட்சி நினைவுக்கு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

9 hours ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

22 days ago

மேலும்