புதுச்சேரி: ஆரோவில் அருகில் உள்ள ராயபுதுப்பாக்கத்தில், புதுவை அறிவியல் இயக்கமும், டிஜிட்டல் என்பவர்மெண்ட் பவுண்டேஷனும் இணைந்து, தொலை நோக்கி உடன் 12 மணி நேர தொடர் இரவு வான் காட்சி நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வு கடந்த 10-ம் தேதி மாலை 6 முதல் 11-ம் தேதி காலை 6 மணி வரை நடந்தது. ஒளி மாசுபாடற்ற இவ்விடம் வெற்று கண் கொண்டு வான் பொருட்களை காண சிறப்பான இடமாக அமைந்தது. இந்நிகழ்வில் 50 கருத்தாளர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் ஹேமாவதி, வானவியலின் ஒருங் கிணைக்கப்பட்ட செயல்பாடு களைப் பற்றி விளக்கினார்.
தொடர்ச்சியாக புதுவை அறிவியல் இயக்கத்தின் தலைவர் முனைவர் மதிவாணன் ‘வானவியல் அறிவோம்' என்ற நழுவுப்பட காட்சியை வழங்கினார். அப்போது வானில் வெள்ளி,செவ்வாய் கோள்கள் தென்படவேஅனைவரும் அதனை தொலை நோக்கி மூலம் கண்டுகளித்தனர். தொடர்ந்து சூரிய பாதை பற்றியும், அதில் சஞ்சரிக்கும் கோள்கள், முக்கியமான 12 ராசி மண்டலம் பற்றி மட்டுமல்லாது அறிவியல் உலகம் பட்டியலிட்டுள்ள 88 நட்சத்திர மண்டலங்களும் அனைவருக்கும் விளக்கப்பட்டது.
இதை மேலும் புரிந்து கொள்வதற்காக கருத்தாளர் களின் கைப்பேசியில் சில முக்கிய செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து நட்சத்திரங்களை உருவாகும் பிளாஸ்மாக்களும் செயற்கை கோள்களும் காண்பிக்கப்பட்டன. இரவு 12 மணிக்கு தெளிவான வானத்தில் சந்திரனும் பின்பு சனிக்கோளும் தோன்றி அனை வரையும் உற்சாகமூட்டியது.
» மணமகள் ஊரில் நடைபெற இருந்த திருமணத்துக்கு 51 டிராக்டரில் ஊர்வலமாக சென்ற மணமகன்
» பைக் பயணம் மூலம் எல்லை தாண்டி இதயங்களை வென்ற பாகிஸ்தானின் அப்ரார் ஹாசன்
இடைஇடையே கோள்க ளைப் பற்றிய அனைத்து தகவலடங்கிய நழுவு பட காட்சிகளும், டிப் மேட்டர் என்று அழைக்கப்படும் வெகு தொலைவு வான்பொருட்களைப் பற்றி கலந்துரையாடலுடன் படக்காட்சிகளும் காண்பிக்கப்பட்டது. நிகழ்வினைப் பற்றிய கருத்தாளர்களின் குறிப்புகள் கேட்கப்பட்டன. அவர்களுடைய வாழ் விடத்தில் பொதுமக்களுக்காக நிகழ்த்தவுள்ள இரவு வான் காட்சி நிகழ்ச்சி பற்றியும் திட்டமிடப்பட்டது.
விடியற்காலையில் புதன் கோளை யும், சூரியனையும் வரவேற்று குழு படத்துடன் நிகழ்வு முடிவடைந்தது. இந்த 12 மணி நேர இரவு வான் காட்சி வானியலில் மூடநம்பிக்கைகள் அகற்றவும், அதன் அறிவியலைப் புரிந்து கொள்வ தற்கும் சிறப்பான தளமாக அமைந்த தாக பங்கேற்றோர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
16 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago