புதுடெல்லி: பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அப்ரார் ஹாசன். பிளாகரான (Blogger) இவர், பைக்கில் இந்தியா முழுவதும் வலம் வந்துள்ளார். நட்பு ரீதியிலான இந்த பயணத்தில் அவர், 30 நாட்களில், 7 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே மோதல் இருந்து வந்தாலும் அப்ரார் ஹாசனுக்கு இந்திய நகர பகுதிகளில் மிகுந்த அரவணைப்புடன் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மும்பை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பல்வேறு சந்திப்புகளின் வீடியோக்களை அப்ரார் ஹாசன் பகிர்ந்துள்ளார். அவர், தனது பயணத்தை வைல்டு லென்ஸ் என்ற யூடியூப் சானலிலும் பதிவேற்றம் செய்துள்ளார்.
ஹாசன் பிஎம்டபிள்யூ பைக்கை ஓட்டியபடி, ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் தனது பயணங்களை படம் பிடித்துள்ளார். அவர், பயணித்த பல்வேறு இடங்களில் அவருக்கு சிறந்த உபசரிப்புடன் உணவும் வழங்கப்பட்டது. சிலர், தங்கள் சொந்த பைக்கில் அவருடன் இணைந்து நீண்ட நேரம் சவாரி செய்து தங்கள் அன்பைக் காட்டினார்கள்.
ஹாசன் தனது பயணத்தை ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கி உள்ளார். கேரளா சுற்றுப்பயணம் குறித்து ஹாசன் கூறும்போது, “கேரளாவை கடவுளின் சொந்த நாடு என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது. கேரளாவில் உள்ள பல கண்கவர் இடங்களில் உப்பங்கழி பார்க்கக்கூடிய ஒன்று” என தெரிவித்துள்ளார்.
» தமிழில் வருகிறது ‘சார்ல்ஸ் என்டர்பிரைசஸ்’
» ‘அவர் என் மகிழ்ச்சியின் இடம்’ - காதலை ஒப்புக்கொண்டார் தமன்னா
ராஜஸ்தான் பற்றிய தனது அனுபவத்தையும் ஹாசன் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் தனது பதிவில், “பரப்பளவில் ராஜஸ்தான் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் என்று அழைக்கப்படுகிறது. மன்னர்களின் தேசம் என்று அழைக்கப்படும் இது மிகவும் கவர்ச்சிகரமான கலாச்சாரத்திற்கு சொந்தமானது மட்டுமல்ல, மிக அழகான கோட்டைகள், அரண்மனைகள், கோயில்கள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், “இந்தியா வடக்கிலிருந்து தெற்கு வரை பலதரப்பட்ட நிலப்பரப்புடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நான் வித்தியாசமான ஒன்றைக் கண்டேன், உள்ளூர்வாசிகளின் நட்பு அதை இன்னும் சிறப்பாக்கியது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
21 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
1 month ago