சத்தமின்றி சைக்கிள் பயிற்சி: சாதனை படைக்கும் மனநலம் குன்றிய மாணவர்கள்

By இ.ஜெகநாதன்


காரைக்குடி: காரைக்குடியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் இலவசமாக சைக்கிள் பயிற்சி அளித்து மனநலம் குன்றிய மாணவர்களை சாதனை படைக்க வைத்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள கண்டர மாணிக்கத்தில் தண்டாயுத பாணி அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு உடற்கல்வி ஆசிரியராக பணி புரிந்து வருபவர் நாகராஜன். இவரும், இவரது மகன், மகளும் சைக்கிள் பந்தய வீரர்கள். காரைக்குடியைச் சேர்ந்த இவர், கடந்த 15 ஆண்டுகளாக காரைக்குடி மானகிரியில் மாணவர் களுக்கு இலவசமாக சைக்கிள் பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் தேசியப் போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளனர்.

பயிற்சியாளர் நாகராஜன்

அதேபோல் மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சைக்கிள் பயிற்சி அளித்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங் களைச் சேர்ந்த மன நலம் குன்றிய மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.

இவரிடம் பயிற்சி பெற்ற மூன்று பேர் தேசிய அளவி லான போட்டியில் தங்கம் வென்றுள்ளனர். தற்போது நெல்லை தனியார் சிறப்புப் பள்ளி மாணவி ஜெயசீலா, ஜெர்மனியில் நடை பெறவுள்ள சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இது குறித்து உடற்கல்வி ஆசிரியர் நாகராஜன் கூறிய தாவது: மனநலம் குன்றிய மாண வர்களுக்குப் பயிற்சி அளிப்பது சாதாரணமல்ல. தொடர்ந்து மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி அளித்தால், நம்மைப் போன்று அவர்களும் சாதனை படைக்க முடியும். மேலும் சைக்கிள் பயிற்சி பெற்ற மாணவர்களின் படிப்பு, உடல்நலம் உள்ளிட்ட மற்ற செயல்பாடுகளில் முன்னேற்றம் இருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர். அது எனக்கு மகிழ்ச்சி அளிக் கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

27 days ago

மேலும்