கர்நாடகாவில் பயிற்சியின்போது ஐஏஎஃப் விமானம் விபத்து - பாராசூட் உதவியுடன் தப்பிய விமானிகள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சூர்ய கிரண் என்கிற பயிற்சி விமானம் கர்நாடகாவின் போகபுரா என்ற இடத்துக்கு அருகில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விமானம் தரையில் மோதுவதற்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் விமானி உட்பட இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் குதித்து உயிர்தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த இந்திய விமானப் படை உத்தரவிட்டுள்ளது.

சூர்ய கிரண் ரக விமானங்கள், இந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிட்-ஆல் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. இந்திய விமானப் படை, அதன் விமானிகள் ஹவ்க் (Hawk) ஜெட்களில் பறப்பதற்கு முன்பாக, இடைநிலை பயிற்சி என்றழைக்கப்படும் இரண்டாம் கட்ட பயிற்சி மேற்கொள்வதற்காக சூர்ய கிரண் விமானத்தை பயன்படுத்தி வந்தது.

முன்னதாக, கடந்த மாதத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்கர் பகுதியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் (எம்ஐஜி) -21 ரக விமானம் குடியிருப்பு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று போர் உயிரிழந்தனர். விமானி உயிர் பிழைத்தார். வழக்கமான பயிற்சியின்போது நடந்த இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்து இரண்டு வாரங்கள் கழித்து மிக் ரக விமானங்களின் அனைத்துப பயிற்சிகளையும் இந்திய விமானப்படை நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்