அசாம் கல்லூரி மாணவர்கள் 7 பேர் விபத்தில் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி நகரில் மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பொறியியல் மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.

அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி நகரில் அசாம் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் 10 மாணவர்கள் நேற்று காலையில் ஒரு காரில் கல்லூரி வளாகத்தை விட்டு புறப்பட்டனர். காரில் அதிக வேகத்தில் இவர்கள் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் நகரின் ஜலுக்பாரி மேம்பாலம் அருகில் இவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் வந்த மினி லாரி மீது மோதியது. இதில் கார் முற்றிலும் உருக்குலைந்து, 7 மாணவர்கள் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 3 மாணவர்களும் மினி லாரியில் வந்த மூவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அசாமின் திப்ரூகர், சிவசாகர், குவாஹாட்டி, நாகோன், மஜுலி, மங்கள்தோய் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

மாணவர்கள் உயிரிழப்பு குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆழ்ந்த துயரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஜலுக்பாரியில் நடந்த சாலை விபத்தில் இளம் மற்றும் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன். மருத்துவமனை அதிகாரிகளிடம் பேசினேன். காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வரு கின்றன” என்று கூறியுள்ளார். முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, விபத்து நடந்த இடத்துக்கும் சென்று பார்வையிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

46 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்