புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 1921-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான நாடாளுமன்ற கட்டிடங்களின் வரலாறு பின்வருமாறு:
1921, பிப்ரவரி 12: இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு (அப்போது கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது.) அப்போது கன்னாட் பிரபு அடிக்கல் நாட்டினார்.
1927, ஜனவரி 18: நாடாளுமன்ற கட்டிடத்தை அப்போதைய கவர்னர் ஜெனரல் லார்ட் இர்வின் திறந்து வைத்தார்.
1927, ஜனவரி 19: நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது.
1946, டிசம்பர் 9: முதல் அரசியலமைப்பு சபை கூட்டம் நடைபெற்றது.
1947, ஆகஸ்ட் 14/15: நள்ளிரவு அரசியலமைப்பு சபையில் ஆட்சி மாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
1952, மே 13: நாடாளுமன்றத்தின் இரு அவைகள் அடங்கிய முதல் கூட்டம் நடைபெற்றது.
1970, ஆகஸ்ட் 3: நாடாளுமன்றத்தில் புதிய இணைப்பு கட்டிடம் கட்ட, அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அடிக்கல் நாட்டினார்.
1975, அக்டோபர் 24: நாடாளுமன்ற புதிய இணைப்பு கட்டிடத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார்.
1987, ஆகஸ்ட் 15: நாடாளுமன்றத்தின் நூலகத்துக்கு கட்டிடம் கட்ட அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டினார்.
2002, மே 7: நாடாளுமன்ற நூலக கட்டிடத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் திறந்து வைத்தார்.
2009, மே 5: நாடாளுமன்ற இணைப்பு கட்டி டத்தை விரிவாக்கம் செய்ய, அப்போதைய குடியரசுத் துணை தலைவர் முகமது ஹமீத் அன்சாரி மற்றும் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
2017, ஜூலை 31: நாடாளுமன்றத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட இணைப்பு கட்டிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
2019, ஆகஸ்ட் 5: புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான திட்டத்தை குடியரசு முன்னாள் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் சமர்ப்பித்தனர்.
2020, டிசம்பர் 10: புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
2023, மே 28: புதிய நாடாளுமன்ற கட்டிடத் தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago