900 கலைஞர்கள் 10 லட்சம் மணி நேரம் பணியாற்றி தயாரித்த மயில், தாமரை வடிவம் பொறித்த கம்பளங்களால் புதிய நாடாளுமன்றம் அலங்கரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தரையில் விரிக்கப்படும் கம்பளம் தயாரிப்பதற்கான ஆர்டர் ‘ஓபீட்டி’ என்ற நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மிக பிரபல நிறுவனம். இந்த நிறுவனத்தை ஓக்லே, டோடன், ஜல் டெய்லர் என்ற 3 ஆங்கிலேயர்கள் ஆரம்பித்தனர். இதன் தற்போதைய உரிமையாளராக கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ருத்ரா சட்டர்ஜி உள்ளார். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் உள்ள இந்த நிறுவனம் கையால் கம்பளங்களை நெய்கிறது.

இங்கு தயாரிக்கப்படும் கம்பளங்கள், உலகின் பல முக்கிய இடங்கள், விடுதிகள், அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள மரியாட் எசக்ஸ் ஹவுஸ், தி ஒபராய் மராகெச் மொராக்கோ, சிகாகோவில் உள்ள சோகோ ஹவுஸ் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1995-ம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், மிர்சாபூரில் உள்ள இந்த கம்பள நிறுவனத்தை பார்வையிட்டார்.

இந்த கம்பளத்தில் உள்ள டிசைன்கள் குறித்து ருத்ரா சட்டர்ஜி கூறியதாவது: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கம்பளம் நாட்டின் கலாச்சார வரலாற்றையும், அவற்றின் நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின் பாரம்பரிய சாராம்சத்தை, இந்த கவுரவமான கட்டிடத்தின் கம்பள டிசைன்களில் வெளிப்படுத்தியுள்ளோம். மக்களவையில் பயன்படுத்தப்பட்ட கம்பளத்தில் மயில் வடிவம் இடம் பெற்றுள்ளது. அதற்கு இந்திய கலாச்சாரத்தில் சிறப்பான இடம் உள்ளது. அது நாட்டின் தேசிய பறவை. அழகு, கருணையின் வடிவமாக மயில் கருதப்படுகிறது. நாட்டின் கலாச்சாரத்துக்கும், இயற்கை பாரம்பரியத்துக்கும் இந்த கம்பளம் புகழாரம் சூட்டுகிறது.

மாநிலங்களவையில் பயன்படுத்தப்பட்டுள்ள கம்பளத்தில் தாமரை வடிவம் இடம் பெற்றுள்ளது. அது நாட்டின் தேசிய மலர். கம்பளத்தின் வடிவம், நிறம் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டு, இந்திய அடையாளத்தை தெரிவிக் கும் வகையில் இந்த கம்பளம் உருவாக்கப்பட்டது.

கம்பளம் தயாரிப்பு பணியில் உ.பி பாதோகி மற்றும் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 900 கலைஞர்கள் ஈடுபட்டனர். இவர்கள் 10 லட்சம் மணி நேரம் பணியாற்றி இந்த கம்பளத்தை தயாரித்தனர். மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும் தலா 17,500 சதுர அடி பரப்பளவில் கம்பளம் தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு அவைக்கும் 150-க்கும் மேற்பட்ட கம்பளங்கள் தயாரிக்கப்பட்டு அவை ஒன்றாக இணைக்கப்பட்டு, அரைவட்ட வடிவில் கம்பளம் தயாரிக்கப்பட்டது. புதிய நாடாளு மன்ற கட்டிடத்துக்கு கம்பளம் தயாரிக்கும் திட்டத்தை 2020-ம் ஆண்டு மத்தியில் தொடங்கினோம். கம்பளம் நெய்யும் பணி 2021 செப்டம்பரில் தொடங்கி 2022 மே மாதம்முடிவடைந்தது. கம்பளத்தை தரையில் பொருத்தும் பணி கடந்தாண்டு நவம்பரில் தொடங்கியது. அதிக அடர்த்தியுள்ள இந்த கம்பளம் தயாரிக்க 7 மாதங்கள் ஆனது. இவ்வாறு ருத்ரா சட்டர்ஜி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்