ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்புத் தகுதி குறித்த வழக்கு: விசாரணைகளை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்த உச்ச நீதிமன்றம்

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி குறித்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணைகளை நடத்துவதற்கு முன் மத்திய அரசு கால அவகாசம் கேட்டு வாங்கியுள்ளது.

இது குறித்து உரையாடல் பங்கேற்பாளர் ஒருவரை நியமித்திருப்பதாகவும் இவர் மூலம் அது தொடர்பானவர்களிடம் உரையாடல் நடக்கவிருப்பதாகவும் கூறி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் பெற்றது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை அமர்வின் முன் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அரசியல் சட்டப்பிரிவு 35ஏ-வுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை 6 மாதங்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று வாதாடினார்.

ஆனால் நீதிமன்றம் தன் உத்தரவில் 8 வாரங்களுக்குத் தள்ளி வைத்தது.

அரசியல் சாசனச் சட்டம் 35ஏ ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதிகள் சிலவற்றை வழங்குவதாகும், இதன்படி, மாநில ஆட்சியாளர்கள், யார் யார் நிரந்தரமாக அங்கு தங்குபவர்கள் என்று அறுதியிட்டு இவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கும், அதாவது மாநில பொதுத்துறை வேலைவாய்ப்புகள், மாநிலத்தில் சொத்துக்கள் வாங்குவது, ஸ்காலர்ஷிப் மற்றும் பிற பொது உதவிகள், சேமநலத்திட்டங்கள் ஆகியவற்றில் சிறப்புச் சலுகைகள் வழங்க இந்தச் சட்டப்பிரிவு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்குகிறது.

இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தில் விவாதம் வேண்டும் என்றும் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் வலியுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்