புதுடெல்லி: தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நார்கோ சோதனை அல்லது பாலிகிராபி அல்லது உண்மை கண்டறிதல் சோதனைக்கு தான் தயார் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சில நிபந்தனைகளும் வைத்துள்ளார் அவர். அது என்னவென்றால் மல்யுத்த விளையாட்டு வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோரும் இந்த சோதனையை எதிர்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கடந்த மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23 முதல் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரிஜ் பூஷன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
“பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் சோதனைக்கு தயார் என்றால் நானும் சோதனைக்கு தயார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதை நான் உறுதியாக சொல்கிறேன். தற்போது போராடிக் கொண்டிருப்பவர்களை தவிர யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் நான் தவறாக நடந்து கொண்டேன் என சொல்லவே மாட்டார்கள். எனது 11 ஆண்டுகால வாழ்வை நம் நாட்டின் மல்யுத்தத்திற்காக கொடுத்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை விவசாயிகளின் ஆதரவோடு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முடிவில் மல்யுத்த வீராங்கனைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
» ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம்: கிறிஸ் கெயிலின் சாதனையை தகர்த்த கோலி
» RCB vs GT | ரன் மழையுடன் கோலி சதம்; குஜராத்துக்கு 198 ரன்கள் இலக்கு
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago