தமிழகம், கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அண்மை அறிக்கையில் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து குளிர்விக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

வங்கக் கடலின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே கூடிவருவதால் பரவலாக மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் (மே 20 மற்றும் மே 21) அனல் காற்று வீசும். சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் நாளை வெப்பம் கடுமையாக இருக்கும்.

அதேபோல் இன்று (மே 20) கேரளா, தமிழ்நாடு ஆந்திரப் பிரதேச மாநிலங்களிலும் வெப்பமும் அசகவுரியமும் நிலவும் என்றும் ஆந்திராவில் வெப்பம் இன்று அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொங்கன் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கடும் வெப்பம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், அடுத்த 4 நாட்களுக்கு தென் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் சராசரியான அளவில் மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்