பெங்களூருவில் சீன நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.8 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பெங்களூருவில் செயல்படும் சீன நிறுவனம் "ஓடாகிளாஸ்" என்ற பெயரில் ஆன்லைன் மூலமாக கல்வி வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் 100 சதவீதம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிறுவனம் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக கிடைத்த தகவலையைடுத்து அந்த சீன குழுமத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், சீனாவில் உள்ள அந்நிறுவனத்தின் இயக்குநர் லியு கேன் அறிவுறுத்தலின்பேரில் சீனா மற்றும் ஹாங்காங்கில் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் என்ற பெயரில் ரூ.82.72 கோடியை அந்த நிறுவனம் மோசடி செய்துள்ளது.

இது, அந்த நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் கணக்கு மேலாளர் ஆகியோரிடம் அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அந்த நிறுவனத்தின் இந்திய இயக்குநராக உள்ள வேதாந்தா ஹமீர்வாஷியாவும் இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.

விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் செலவினத்துக்கான எந்தவிதமான ஆதாரங்களையும் அந்த நிறுவனம் விசாரணையின்போது தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள ஆன்லைன் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.8.26 கோடி மதிப்பிலான நிதியை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை நேற்று தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்