சண்டிகர்: ஹரியானாவின் அம்பாலா தொகுதி மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.
மூன்று முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்பி ரத்தன் லால் கட்டாரியா, மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் சண்டிகரில் உள்ள PGIMER மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்தார். அவருக்கு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.
ரத்தன் லால் கட்டாரியாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரத்தன் லால் கட்டாரியாவின் மறைவு மிகுந்த வலியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மகத்தான பொது சேவைக்காகவும், சமூக நீதிக்காகவும் அவர் என்றும் நினைவுகூறப்படுவார். ஹரியானாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் அவர். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
» ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை; தமிழ்நாடு அரசின் சிறப்புச் சட்டம் செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» மத்திய அமைச்சரவை மாற்றம்: சட்ட அமைச்சர் பதவியிலிருந்து கிரண் ரிஜிஜு நீக்கம்
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ரத்தன் லால் கட்டாரியாவின் மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மக்களின் முன்னேற்றத்திற்காகவும், நல்வாழ்வுக்காகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் அவர். அவரது மறைவு அரசியலில் ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஆண்டவர் தனது பாதத்தில் அவருக்கு இடம் அளிக்கவும், கடினமான இந்த தருணத்தை கடப்பதற்கான மன வலிமையை அவரது குடும்பத்தினர் பெறவும் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago