குவாஹாட்டி: அசாமின் 'லேடி சிங்கம்' , 'தபங் காப்' என்றழைக்கப்பட்ட பெண் துணை காவல் ஆய்வாளர் ஜன்மொய் ரபா சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அசாம் மாநிலம் மோரிகோலாங் காவல் சோதனைச் சாவடியின் பொறுப்பாளரான ஜன்மொய் ரபா நேற்று காலை கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் நகோன் மாவட்டத்திற்கு அவருடைய காரில் காவல் சீருடை இல்லாமல் தனியாகச் சென்றுள்ளார். அப்போது அவர் காரின் மீது டிரக் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். விபத்து குறித்த தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது அது ஜன்மொய் ரபா என அடையாளம் தெரிந்து கொண்டனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறிவிட்டனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கிரிமினல்களுக்கு கெடுபிடி.. - இவர் தனது பணிக்காலத்தில் கிரிமினல்களிடம் கடுமை காட்டியதாகவும், அதனால் பல்வேறு எதிர்ப்புகளையும் சம்பாதித்ததாகவும் தகவல் உண்டு. அதனால் இவரை சிலர் 'லேடி சிங்கம்' எனக் கூறுவர். ’சிங்கம்’ என்பது தமிழில் வெளியான சூர்யாவின் சிங்கம் படத்தின் ரீமேக் ஆகும். சிங்கம் நேர்மையான கிரிமினல்களுக்கு அஞ்சாத காவலர் பற்றிய படம்.
அதேவேளையில் இவர் கிரிமினல்களை கடுமையாகக் கையாண்டாலும் அவர்களை மிரட்டி பணம் பறிக்கவும் செய்வார் என்ற விமர்சனமும் உண்டு. அதனால் அவரை சிலர் 'தபங் போலீஸ்' என்றும் அழைப்பதுண்டு. இப்படத்தில் சல்மான் கான் நடித்த சுல்புல் பாண்டே கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் ‘ஒஸ்தி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு அவர் தனது காதலரை மோசடி வழக்கில் கைது செய்தார். ஆனால் அதை வழக்கில் அவரும் கைதானார். அவரை மஜூலி நீதிமன்றம் காவலில் வைத்து. பின்னர் வழக்கு முடிந்து அவரது பணியிடை நீக்கம் திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில், நேற்று அதிகலை அவர் சென்ற கார் மர்மமான முறையில் விபத்துக்குள்ளானது. 2.30 மணியளவில் விபத்து பற்றி தகவல் வந்ததாகவும். சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அது ஜன்மொய் ரபா எனத் தெரியவந்ததாகவும் காவல் நிலைய அதிகாரி பவன் கலிடா கூறினார். விபத்தை ஏற்படுத்திய டிரக் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தது. அந்த டிரக்கையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில் ஜன்மொய் ரபா மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர், உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago