புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகளுக்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமராக பதவியேற்றார். இதை முன்னிட்டு நாடு முழுவதும் மே 30-ம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு சிறப்பு பிரச்சார பேரணி மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
396 மக்களவை தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இதில் பாஜக மூத்ததலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இறுதி கட்டபணிகள் நடைபெற்று வருகின்றன. அதை இம்மாத இறுதியில் பிரதமர் மோடி திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். 4 மாடிகள் கொண்ட இந்த புதிய நாடாளுமன்றம் ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கேன்டீன், வாகன பார்க்கிங் வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago