திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தல்

By என்.மகேஷ் குமார்

திருப்பதி முதலாவது மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அலிபிரியிலிருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, சித்தூர் மாவட்ட வன அதிகாரி ஃபனி குமார் திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருப்பதி கபிலதீர்த்தம் ஜங்கிள் புக் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 10 நாட்களாக ஒரு சிறுத்தை தனது 2 குட்டிகளுடன் நடமாடுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆங்காங்கே அமைக்கப்பட்ட கூண்டுகளில் குட்டிகள் சிக்கிக் கொண்டன. ஆனால் தாய் சிறுத்தை இன்னும் பிடிபடவில்லை.

எனவே, அலிபிரி மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் இரவு வேளைகளில் தனியாக செல்ல வேண்டாம். கும்பலாக கவனத்துடன் செல்லுங்கள். விரைவில் தாய் சிறுத்தையை பிடித்து விடுவோம். பக்தர்கள் யாரும் பயப்பட தேவையில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்