புதுடெல்லி: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங் கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபோல பாஜக நிர்வாகிகளின் கடின உழைப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 136 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள். மாநில மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கு அக்கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தலில் கடினமாக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களிலும் கர்நாடக மக்களுக்கு நாம் இன்னும் வீரியமுடன் சேவை புரிய வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago