ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த பாஜகவுக்கு இனி துணிவிருக்காது என்று முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவருமான ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைப்பதை நோக்கி முன்னேறி வருகிறது.
இந்த நிலையில் 8 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தேர்தலை நடத்த பாஜகவுக்கு கர்நாடக தேர்தல் முடிவுகள் பயத்தை கொடுத்திருக்கும் என்று ஒமர் அப்துல்லா மறைமுகமாகக் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை அனுமதிக்கும் தைரியம் இப்போது பாஜகவுக்கு இருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.
» “கர்நாடக தேர்தல் முடிவுகள் மோடி, அமித்ஷா கூட்டணிக்கு பெருத்த அடி” - கே.பாலகிருஷ்ணன் கருத்து
முன்னதாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago