Karnataka Election Results | சிக்மகளூர் தொகுதியில் சி.டி.ரவிக்கு பின்னடைவு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பின்தங்கியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி - 120, பாஜக - 73, மஜத - 25, மற்றவை- 6 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன.

ஷிக்கான் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலை வகித்து வருகிறார். வருணா தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா முன்னிலையில் இருக்கிறார். கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் டி.கே. சிவக்குமார் முன்னிலையில் இருக்கிறார். சென்னபட்னா தொகுதியில் ஹெச்.டி. குமாரசாமி முன்னிலை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக பாஜக மூத்த தலைவரும், பாஜக தேசிய பொதுச் செயலாளருமான சி.டி.ரவி தான் போட்டியிட்ட சிக்மகளூர் தொகுதியில் பின் தங்கியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெ.டி.தம்மையா 22,435 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இதே சிக்மகளூர் தொகுதியில், சி.டி.ரவி நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ஆம் ஆண்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.எஸ்.ஷங்கரை 26,314 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE