Karnataka Election Results | தொடர்ந்து பின்தங்கும் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தொடர்ந்து பின் தங்கி வருகிறார்.

கர்நாடக முன்னாள் முதல்வரான ஜெகதீஷ் ஷெட்டருக்கு இந்த தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்காததை அடுத்து அவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அங்கு அவர் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹூப்ளி-தார்வாட் மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டது.

இந்த தொகுதியில் பாஜக சார்பில் மகேஷ் தெங்கினாகை என்பவர் நிறுத்தப்பட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, இருவருக்கும் இடையே கடும் போட்டி இருந்து வந்தது. இந்நிலையில், ஹூப்ளி-தார்வாட் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் காலை முதலே தொடர்ந்து பின்தங்கி வருகிறார். 11.30 மணி நிலவரப்படி மகேஷ் தெங்கினாகை சுமார் 40 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். ஜெகதீஷ் ஷெட்டர் 21,150 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாம் இடம் வகித்து வருகிறார். 11.30 மணி நிலவரப்படி நமகேஷ் தெங்கினாகை 63 சதவீத வாக்குகளும், ஜெகதீஷ் ஷெட்டர் 33 சதவீத வாக்குகள் பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE