Karnataka Election Results | வெற்றிக் கொண்டாட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருவதால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளன.

கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 115 தொகுதிகளிலும், பாஜக 80 தொகுதிகளிலும் ஜனதா தளம் கட்சி 25 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியபடியே, காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருவதை அடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி தங்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பரிய உடையணிந்த நடனக் கலைஞர்களும் மேள, தாள வாத்தியக் கலைஞர்களும் அங்கு குவிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE