Karnataka Election Results| 12 மணி நிலவரம்: 120 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து, அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

12 மணி நிலவரம்: கர்நாடக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி - 120, பாஜக - 73, மஜத - 25, மற்றவை- 6 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன.

ஷிக்கான் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலை வகித்து வருகிறார். வருணா தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா முன்னிலையில் இருக்கிறார். கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் டி.கே. சிவக்குமார் முன்னிலையில் இருக்கிறார். சென்னபட்னா தொகுதியில் ஹெச்.டி. குமாரசாமி முன்னிலை பெற்றுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன.

பாஜகவை பின்னுக்குத் தள்ளிய காங்கிரஸ்: தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியபடியே, தேர்தல் முடிவுகள் குறித்த முன்னணி நிலவரங்கள் உள்ளன. பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை நோக்கி காங்கிரஸ் முன்னேறி வருகிறது. இதை அடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திலும், கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி தங்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர்.

தேர்தல் பின்னணி: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்