பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை அமைக்கும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஹூப்ளியில் உள்ள அனுமன் கோயிலில் சிறப்புப் பூஜை செய்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: "இன்று பாஜகவுக்கு மிகப்பெரிய நாள். கர்நாடக மக்களின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. பாஜக அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன் பெரும் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை அமைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடக்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.
காலை 8.30 மணி நிலவரம்: காலை 8.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், பாஜக 62 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 18 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
தேர்தல் பின்னணி: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். காலை 10 மணி முதல் முன்னிலை விவரம் வெளியாகி 2 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago