“தி கேரளா ஸ்டோரி’’ - கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் ஆதரவு

By செய்திப்பிரிவு

கேரள மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களின் உச்ச அமைப்பான கேசிபிசி "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்துக்கு முதன்முதலாக ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கேசிபிசி செய்தித் தொடர்பாளர் பாதர் ஜேக்கப் பாலக்கப்பிள்ளி கூறியதாவது: “தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தை இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரின் கலை வேலைப்பாடாக பார்க்க வேண்டும். இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு செய்த அட்டூழியங்களை இந்த படம் அம்பலப்படுத்தியுள்ளது. எனவே, இதனை வகுப்புவாதத்தின் அடிப்படையில் மதிப்பிட முடியாது.

காதல் வலையில் பெண்கள் சிக்கவைக்கப்பட்டு அவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளில் சேர்க்கப்பட்ட உண்மைகளையும் மறுக்க இயலாது. காதல் திருமணத்திற்குப் பிறகு கட்டாய மதமாற்றம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறு பாலக்கப்பிள்ளி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்