புதுடெல்லி: ஐஏஎஸ் அதிகாரி நியமன விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு புதிய வழக்கை தொடர்ந்துள்ளது.
டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
‘‘டெல்லி துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் விவகாரங்களை தவிர்த்து இதர அனைத்து அதிகாரங்களும் டெல்லி அரசுக்கு உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் அவரவர் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் டெல்லி அரசின் சேவைத் துறை செயலாளர் ஆசிஷ் மோரே பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அந்த பதவியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஏ.கே.சிங் நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த பணி நியமன உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு மறுப்பதாக குற்றம் சாட்டி ஆம் ஆத்மி அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய வழக்கு தொடரப்பட்டது.
» கர்நாடகாவில் இன்று வாக்கு எண்ணிக்கை - ஆட்சி அமைப்பது யார் என்பது பிற்பகலுக்குள் தெரியும்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆம் ஆத்மி அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். அவர் கூறும்போது, “ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு மறுக்கிறது. டெல்லி அரசின் சேவைத் துறை செயலாளராக ஏ.கே.சிங்கை ஆம் ஆத்மி அரசு நியமித்துள்ளது. இந்த நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க துணை நிலை ஆளுநர் மறுக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இதனை உடனடியாக விசாரிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
புதிய வழக்கை விசாரிக்க புதிதாக அமர்வு உருவாக்கப்படும். அடுத்த வாரம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் உறுதி அளித்தார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத் தலின்படி டெல்லி அரசு தரப்பில் கடந்த 2014-ம் ஆண்டில் "சிவில் சர்வீஸ் போர்டு" (சிஎஸ்பி) அமைக் கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் முன்பாக இந்த குழு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். ஆசிஷ் மோரே விவகாரத்தில் சிஎஸ்பி குழுவின் பரிசீலனை இல்லாமல் டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இது சட்ட விதிமீறல். இதை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
32 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago