பார்வதிபுரம்: மின்சாரம் தாக்கியதில் ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் வனப்பகுதி அருகே 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
ஒடிசா மாநில வனப்பகுதிகளில் இருந்து வந்த 6 யானைகள் ஆந்திர வனப்பகுதியான மன்யம் மாவட்டத்தில் சில நாட்களாக சுற்றி திரிந்து வருகின்றன. இந்தகூட்டத்தில் இருந்து பிரிந்த 4 யானைகள் வியாழக்கிழமை நள்ளிரவு காட்ரகடா-பி எனும் கிராமத்தில் தண்ணீர் தேடி வந்தபோது, டிரான்ஸ்பாரத்தில் மின்சாரம் பாய்ந்து 3 பெண்யானைகள் உட்பட 4 யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
கடந்த 2 நாட்களாக ஆந்திர வனப்பகுதி அருகில் உள்ள மொட்டுலுசேனு, சிக்கநத்தம், மல்லனூர் கிராமங்களில் 2 யானைஒகள் புகுந்தன. அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்தன. இதையடுத்து, மல்லனூர், பைபாளம், குசூர் பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில், பெங்களூருவுக்கு கூலி வேலைக்கு ரயிலில் செல்வதற்காக மல்லனூர் ரயில் நிலையம் அருகே சென்றபருத்திகொல்லையை சேர்ந்த உஷா (34) என்பவரை யானைகள் தாக்கி கொன்றன.
பின்னர் அதே பகுதி வழியாகவனப்பகுதிக்குள் செல்ல முயன்றயானைகள், இயற்கை உபாதைகழிக்க வந்த மல்லனூரைசேர்ந்த சிவலிங்கம் (65) என்பவரையும் தாக்கியது. இதில் அவர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் வனத் துறையினர், போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துவிசாரணை மேற்கொண்டனர். உடல்களை பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலாரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
தமிழக - ஆந்திர எல்லைகளில் பல ஆண்டுகளாக யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது. கடந்த 2 மாதங்களில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில், 4 பேரை தாக்கி கொன்ற யானைகள் ஆந்திர எல்லையில் நேற்று அதிகாலை 2 பேரை கொன்றுள்ளன.
அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட இரு மாநில வனத் துறையினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
51 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago