மகேந்திரகிரியில் இஸ்ரோ மேற்கொண்ட செமி-கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி

By செய்திப்பிரிவு

பெங்களூரு: தமிழகத்தின் மகேந்திரகிரியில் இஸ்ரோவின் ராக்கெட் இன்ஜின் பரிசோதனை மையம் உள்ளது. இங்கு செமி-கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனை மையம் புதிதாக தொடங்கப்பட்டது.

இங்கு 2000 கே.என் (கிலோநியூடன்) திறனுள்ள செமிகிரையோஜெனிக் இன்ஜின் நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகம் தெரிவித்தது.

இந்த 2000 கே.என் இன்ஜின் திரவ ஆக்ஸிஜன் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் இயங்கக் கூடியது. இந்த வகை இன்ஜின்கள் எதிர்காலத்தில் அனுப்பப்படும் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த இன்ஜினில் உள்ள குறைந்த அழுத்தம் மற்றும் அதிக அழுத்தம் கொண்ட டர்போ பம்ப்புகள், காஸ் ஜெனரேட்டர், கட்டுப்பாட்டு கருவிகளின் செயல்பாடுகள் நேற்று முதல் முறையாக பரிசோதனை செய்யப்பட்டன. இந்த இன்ஜின் வடிவமைப்பை இஸ்ரோவின் திரவ எரிபொருள் இன்ஜின் மையம் (எல்பிஎஸ்சி) உருவாக்கியது. முழு அளவிலான இன்ஜின் பரிசோதனைக்கு முன்பாக, நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட செமி-கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை மிக முக்கிய சாதனை என இஸ்ரோ கூறியுள்ளது.

சுமார் 15 மணி நேரம் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது. செமி-கிரையோஜெனிக் இன்ஜினின் இந்த பரிசோதனை அடுத்தகட்ட பரிசோதனைகளுக்கு வழிவகுத்துள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் அதிக எடையுடன் கூடிய செயற்கை கோள்களை, இஸ்ரோ ராக்கெட் டுகள் கொண்டு செல்லும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்