கர்நாடகத் தேர்தல் - தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இந்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளன. கணிசமான கணிப்புகள், எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும்பாலும் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளன. ஓரிரு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என 3 கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘இத்தேர்தலில் காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் 130-135 இடங்களில் வெற்றிபெறும்'' என்றார். பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ‘‘பிரதமர் மோடியின் இரட்டை இன்ஜின் அரசுக்கு மக்கள் நல்ல முடிவை தருவார்கள். பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்'' என்றார்.

முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது. சுமார் 72.22 சதவீத வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்ற‌து. இதில் 2.67 கோடி ஆண்கள், 2.64 கோடி பெண்கள் என 5.31 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

மாநிலம் முழுவதும் 58,282வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 11,617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டன‌. தேர்தல் பணியில் 3.51 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இணையவழியாக கண்காணிக்கப்பட்டது. தேர்தல் பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 1.56 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டன‌ர்.

மும்முனை போட்டி: இத்தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம்207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கின. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்ட‌னர் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 13-ல் வாக்கு எண்ணிக்கை: வாக்கு எண்ணும் மையங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மே 13-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். காலை 10 மணி முதல்முன்னிலை விவரம் வெளியாகி பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்