கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.22% வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.22% வாக்குப்பதிவாகியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கடைசியாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைதியாக நடந்த முடிந்த தேர்தலில் 72.22% வாக்குப்பதிவாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. இறுதிவிவரங்கள் வெளியாகும் பட்சத்தில் உண்மை நிலவரம் தெரியவரும்.

கடந்த 2018 கர்நாடக தேர்தலில் 72.36% வாக்குகள் பதிவாகியிருந்தன. இம்முறை வாக்குப்பதிவு, 2018ம் ஆண்டு பதிவான சதவிகிதத்தை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகபட்சமாக கர்நாடகாவின் ராமநகரில் 84.98% வாக்குகள் பதிவாகியுள்ளன. துமகுருவில் 83.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேநேரம், பெங்களூருவில் 54.14% வாக்குகளே பதிவாகியுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

மும்முனைப் போட்டி: கர்நாடகாவில் பாஜக, காங்., மஜத இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதசார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற‌னர். வாக்கு எண்ணிக்கை மே 13 தேதி நடைபெற இருக்கிறது.

கர்நாடகாவில் இந்த முறை, ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்