புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் நேற்று கூறியதாவது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அரசு பங்களா ரூ.45 கோடியில் புதுப்பிக்கப்படவில்லை. அதைவிட மூன்று மடங்குக்கும் அதிகமாக ரூ.171 கோடி செலவில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான பட்ஜெட்டை டெல்லி அரசு நிறைவேற்றியபோது கேஜ்ரிவாலின் பங்களாவை புதுப்பிப்பதற்குத்தான் இந்த தொகை செலவிடப்பட உள்ளது என்பதை எந்த இடத்திலும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
கேஜ்ரிவாலின் பங்களாவை சுற்றிலும் 22 அதிகாரிகள் வசிக்கும் வீடுகள் இருந்தன. சீரமைப்பு பணிகள் தொடங்கியதில் அந்த வீடுகள் காலி செய்யப்பட்டு கேஜ்ரிவாலின் பங்களா விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, அந்த 22 அதிகாரிகளும் தங்குவதற்கு காமன்வெல்த் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை டெல்லி அரசு வாங்கியுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பின் விலையும் ரூ.6 கோடி ஆகும். இந்த பணம் மாநில அரசின் கருவூலத்திலிருந்து செலவழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago