80 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கில் தீர்ப்பு: 93 வயது மூதாட்டியிடம் 2 வீடுகளை ஒப்படைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பையில் 2 வீடுகளை 93 வயது மூதாட்டியிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ளது ரூபி மேன்ஷன். இந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் 500 சதுர அடி மற்றும் 600 சதுர அடியில் 2 வீடுகள் யாருக்கு சொந்தம் என்பது குறித்துபல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. சுதந்திரத்துக்கு முன்னர் கடந்த 1942-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேற்கூறிய 2 வீடுகளையும் அரசு கோரியது.

அந்தக் காலத்தில் தனியார் சொத்துகளை தேவைப்பட்டால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எடுத்துக் கொள்ள இந்திய பாதுகாப்புச் சட்டம் வழிவகுத்திருந்தது. அதன்படி அந்த 2 வீடுகளும் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.

அதன்பின், கடந்த 1946 ஜூலை மாதம் அந்த 2 வீடுகளையும் திரும்ப உரிமையாளரிடமே ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், 2 வீடுகளின் உரிமையாளர் ஆலிஸ் டிசோசா என்பவரிடம் அவற்றை ஒப்படைக்கவில்லை. இதையடுத்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில் ஆலிஸ் கூறும்போது, ‘‘ரூபி மேன்ஷன் குடியிருப்பில் கையகப்படுத்தப்பட்ட மற்ற வீடுகள் எல்லாம் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

ஆனால், எங்களுக்கு சொந்தமான 2 வீடுகளை மட்டும் ஒப்படைக்கவில்லை. எனவே, வீடுகளை எங்களிடம் ஒப்படைக்க மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

ஆனால், அந்த வீடுகளை கையகப்படுத்தி அப்போது அரசு சிவில் சர்வீஸ் துறையில் பணியாற்றிய அதிகாரி டிஎஸ் லவுட் என்பவர் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பிறகு வாரிசுகள் அந்த வீட்டில் குடியிருந்து வருகின்றனர். எனவே, 2 வீடுகளை ஆலிஸிடம் ஒப்படைக்க அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த வழக்கு கடந்த 80 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதிகள் ஆர்.டி.தனுகா, எம்.எம்.சதாயி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து கடந்த 4-ம் தேதி தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

மும்பை தெற்கு பகுதியில் உள்ள 2 வீடுகளை கையகப்படுத்திய உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதன்பிறகு உரிமையாளர் ஆலிஸ் டிசோசாவிடம் வீடுகளை ஒப்படைக்க கடந்த 1946-ம் ஆண்டு ஜூலை மாதமே உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், மனுதாரர் ஆலிஸ் டிசோசாவிடம் வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை. எனவே, 2 வீடுகளையும் 8 வாரங்களுக்குள் உரிமையாளர் ஆலிஸிடம் ஒப்படைக்க மகாராஷ்டிர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அந்த வீடுகளில் குடியிருப்பவர்களை சுமூகமாக வெளியேற்ற வேண்டும். காலியான நிலையில் வீடுகளை ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்