உ.பி.யில் மது அருந்துவோர் எண்ணிக்கை உயர்வு: கள்ளச்சாராயம், கடத்தல் மீதான தடுப்பு நடவடிக்கைகள் காரணமா?

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு கள்ளச்சாராயம், கடத்தல் உள்ளிட்டவை மீது அரசு எடுக்கும் நடவடிக்கை காரணம் எனக் கருதப்படுகிறது.

உ.பி.யில் பீர் மற்றும் ஒயின் அருந்துவோர் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்துள்ளன. இம்மாநில அரசின் ஆயத்தீர்வை துறை சார்பில் சமீபத்தில் புள்ளிவிவரங்கள் வெளியாகின.

இதில், அன்றாட மதுவின் விற்பனை மூன்று பில்லியன் அளவில் உயர்ந்திருப்பது தெரிந்துள்ளது. குறிப்பாக இந்த விற்பனை கடந்த இரண்டு வருடங்கள் வரை வெறும் ஒரு பில்லியனாக மட்டுமே இருந்துள்ளது.

புதிய புள்ளிவிவரத்தின்படி, உ.பி.யின் மாவட்டங்களில் ஒன்று முதல் இரண்டு கோடி ரூபாய் அளவில் விற்பனை இல்லாதவையே இல்லை எனலாம். இதன் பல மாவட்டங்களில் 12 முதல் 15 கோடி ரூபாய் வரை விற்பனையாவதும் உண்டு.

டெல்லிக்கு அருகிலுள்ள நகரங்களான நொய்டா மற்றும் காஜியாபாத்தில் ரூ.12 முதல் 15 கோடி அளவில் மது விற்பனை உள்ளன. ஆக்ராவில் ரூ.12 முதல் 13 கோடி வரையும் உள்ளன.

இதர முக்கிய நகரங்களில் மீரட்டில் சுமார் ரூ.10 கோடி, லக்னோவில் ரூ.12 கோடி, கான்பூரில் ரூ.8 கோடி என விற்பனை உயர்ந்துள்ளன. புனித நகரங்களான வாரணாசியில் சுமார் ரூ.6 கோடி மற்றும் பிரயாக்ராஜில் ரூ.4.5 கோடி என விற்பனை அதிகரித்துள்ளது.

இதனால், உ.பி மாநில அளவில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு டிரில்லியன் ரூபாய் அளவில் மது விற்பனையாகின்றன. இந்தநிலையால், உபிவாசிகளில் மது அருந்துவோர் எண்ணிக்கையும் பல மடங்குகள் உயர்ந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இதற்கு காரணமாக, மது விற்பனைக்கானப் பகுதிகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, பாஜக ஆளும் உபி.,யில் மது விநியோகத்தில் பலவகை கண்காணிப்புகள் தீவிரமாக்கப்பட்டிருப்பதும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உ.பி. அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘மதுவின் உற்பத்தி முதல் விநியோகம் வரை அனைத்து கட்டங்களிலும் அரசின் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மது தயாரிப்பதற்கான அதன் ஆலைகளின் கச்சா பொருள் அளவில் உற்பத்தில் எவ்வளவு வரும்? அவை விநியோக்கப்பட்டதன் கணக்குகளையும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கிறோம்.

மது ஆலைகளிலிருந்து உற்பத்தியுடன் வெளியேறும் வாகனங்கள் தலைமை அலுவலக கம்ப்யூட்டர் அனுமதி இன்றி கிளம்ப முடியாது. மாநிலம் முழுவதிலும் உள்ள கடைகளில் சிசிடிவி கேமிராக்களை பொறுத்தி இரவு 10.00 மணிக்கு அவை மூடுவதை உறுதி செய்கிறோம்.

முக்கியமாக கள்ளச்சாராயம் தயாரிப்பு, மது பாட்டில்கள் கடத்தல் போன்றவைகளை கடந்த 2 வருடங்களாகத் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், மக்கள்தொகை எண்ணிக்கையை பொறுத்து இதர பயன்பாடுகளை போல் மதுவிலுமான உயர்வை தவிர்க்க முடியாது.’ எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்